தினமும் இரவு
பகல் மாறி மாறி வருவது போல வாழ்க்கை என்பது இன்பம் துன்பம், ஏற்றம் இறக்கம், வெற்றி
தோல்வி, இஷ்ட கஷ்டங்கள் கலந்தது தான்.
இன்று உலகமே இரவில் மின்விளக்கால் ஒளிர்கிறது
என்றால் அதற்கு மறைந்த அறிவியல் விஞ்ஞானி திரு. தாமஸ் அல்வா எடிசன் தான் காரணம்
என்று சொன்னால் அது மிகையாகாது. திரு. தாமஸ் அல்வா எடிசன் அவர்கள் தனது நீண்ட கால
ஆராய்ச்சியின் மூலம் 19-ம் நூற்றாண்டு பிற்பகுதியில் மின்விளக்கை கண்டுபிடித்தார்.
அவரிடம் ஒரு நிருபர் இதை கண்டுபிடிக்கும் பொழுது
1000 முறை தோல்வி அடைந்தீர்களே அதன் அனுபவம் எப்படி இருந்தது என்று கேட்டார்.
அப்போது திரு. எடிசன் அவர்கள் நான் 1000 முறை தோல்வியுறவில்லை 1000 படிக்கற்களை
கடந்து தான் இதை கண்டுபிடித்தேன் என்று கூறினார்.
ஒவ்வொருவரின் வாழ்க்கையும் நல்ல தீய பலன்கள் கலந்ததுதான். சில தடைகளை தாண்டி வந்தால் தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். அது தான் நிரந்தர வெற்றியாகும்.
ஒரு ஜோதிடர் தன்னிடம் ஜோதிடம் பார்க்க வரும் வாடிக்கையாளரிடம் அவரின் ஜாதகத்தை ஆய்வு செய்த பின்பு வாடிக்கையாளரை குஷிபடுத்துவதற்காக அதில் உள்ள நல்ல பலன்களை மட்டும் எடுத்துரைக்காமல் சிறு சிறு தீய பலன்களையும் மென்மையாக கூறி அதனை எப்படி சமாளிப்பது என்பதனையும் விளக்க வேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்தாகும்.

இதற்கு நான் ஒரு சிறிய
உதாரணம் கூற விரும்புகிறேன்.
இருசக்கர வாகனத்தில்
பயணிக்கும் ஒருவர் ஒரு இடத்தில் நின்று அங்கு உள்ள ஒரு பெரியவரிடம் இனி
வரவிருக்கும் சாலை எப்படி இருக்கும் எனக் கேட்பதாக வைத்துக்கொள்வோம். அதற்கு அந்த
பெரியவர் வரவிருக்கும் சாலை அற்புதமாக இருக்கும் விரைவாக செல்லலாம் என்று கூறுவதை
காட்டிலும் வரவிருக்கும் சாலை அற்புதமாக இருக்கும் விரைவாக செல்லலாம் ஆனால் அதே
சமயம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வேகத்தடை/அபாய வளைவு உள்ளது அங்கு மட்டும் சற்று
எச்சரிக்கையாக செல்லுங்கள் என்று கூறுவதே சிறப்பாகும்.
No comments:
Post a Comment