ஜோதிடரை பற்றி

யார் இந்த ஜோதிடர்?

ஜோதிடர் அருண் சுப்ரமணியன் அவர்கள், திருச்சி மாவட்டம், லால்குடி அருகாமையில் உள்ள இராமநாதபுரம் என்ற கிராமத்தில் பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் திரு. சுப்ரமணியன் தேவிகா அவர்களுக்கு மகனாக பிறந்தவர்.

ஜோதிட சாஸ்திரத்தின் மகிமையை அனுபவ பூர்வமாக உணர்ந்த காரணத்தினால் அதன் மீது ஆர்வம் அதிகமாகி தனது பதினெட்டு வயதினிலேயே பாரம்பரிய ஜோதிட முறையை கற்றவர். இருப்பினும் பலன் சொல்வதில் சில சிரமங்கள் இருந்த வேளையில் தெய்வ அனுகிரகத்தால் உயர் கணித சார ஜோதிட முறையை வளர்த்து வரும் ஜோதிட நல்லாசிரியர் திரு. தேவராஜ் ஐயா அவர்களின் அறிமுகம் ஏற்பட்டு, பிறகு அவரிடம் ஒரு மாணவராக சேர்ந்து சார ஜோதிட முறையையும், அதன் யுக்திகளையும் நன்கு கற்றவர்.
இத்தகைய உயர் கணித சார ஜோதிட முறையில் தான் இந்த இணையதளத்தின் வாயிலாக வாசகர்களுக்கு ஜோதிட ஆலோசனைகள் வழங்கப்படுகின்றது.


ஜோதிடர் சொல்வது என்ன?

இந்த நவீன காலத்தில் அதுவும் இளம்வயதில் எப்படி எனக்கு ஜோதிடத்தில் ஆர்வம் வந்தது என நினைக்ககூடும்.. நிச்சயமாக இதைப் பற்றி நான் இங்கே விளக்குகிறேன்.

எனது நெருங்கிய உறவினர் ஒருவர் ஜோதிடத்தை கற்றுத் தெரிந்தவர். ஒருமுறை நான் தொழிற்க்கல்வி பயில்கின்ற சமயத்தில் அவர் எமது இல்லத்திற்கு வருகைதந்த போது எனது ஜாதகத்தை கொடுத்து பலன் சொல்லுங்கள் எனக் கூறினேன். காரணம் எனக்கு சிறுவயது முதலே ஜோதிடத்தின் மேல் சற்று நம்பிக்கை அதிகம். அவர் எனது ஜாதகத்தை ஆராய்ந்த பின்னர் என்னிடம் மூன்று முக்கிய விஷயங்களை முன்னிருத்திக் கூறினார். அப்படியே சிலகாலம் சென்றது. அவர் சொன்ன அந்த மூன்று விஷயங்கள் ஒவ்வொன்றாக என்வாழ்வில் அரங்கேறின. அப்பொழுது தான் நான் நம் முன்னோர்கள், முனிவர்கள், ரிஷிகளின் பெருமையை உணர்ந்தேன்.

பிறகு அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நீங்கள் சொன்னது அனைத்தும் என்வாழ்வில் நடந்தது எனக்கூறி மேலும் சில வினாக்களை அவரிடம் எழுப்பினேன். அப்போது அவர் ஜோதிடம்என்பது கடல் போன்றது அதற்கு எல்லையில்லை, மேலும் நான்கற்றது வெறும் 30 சதவிகிதம் மட்டுமே எனக்கூறினார்.
வெறும் 30 சதவிகிதம் மட்டுமே ஜோதிடத்தை அறிந்த ஒருவர் இவ்வளவு துள்ளியமாக பலன்கூறுகிறார் எனில் ஜோதிடம் எத்தனை சிறப்புமிக்ககலை என்பது என்சிந்தனையில் அப்போது ஓடிக்கொண்டிருந்தன. அப்பொழுது எனக்கு வயது 18.

பிறகுநேரம் கிடைக்கும்போதெல்லாம் ஜோதிடம் என்றால் என்ன, எதன் அடிப்படையில் உருவானது போன்ற தகவல்களை சேகரிக்க தொடங்கினேன். அச்சமயத்தில் நான் விளையாடும் நேரங்களை கூடகுறைத்துக் கொண்டு ஜோதிடநூல்களை பலவற்றை படிக்க ஆரம்பித்தேன். இதற்கு கூகுளையும், யூடியுபையும் கூடக் விட்டுவைக்கவில்லை. அதன்பிறகு ஒருகட்டத்தில் பாரம்பரிய ஜோதிடத்தை முறையாககற்றுத் தெரிந்து கொண்டேன். அப்பொழுது எனக்கு வயது 20. இருப்பினும் அப்பொழுது ஜோதிடத்தை ஒருதொழிலாகச் செய்ய வேண்டும் என்று துளியளவும் எண்ணம் எனக்கு வந்ததில்லை. ஏன் பலன் கூட யாருக்கும் வெளிப்படையாக சொன்னதில்லை.

காரணம் எந்த ஒருதுறையானாலும் அதில் நாம் கற்பதை காட்டிலும் அதனுள் நாம் செய்யும் ஆராய்ச்சியின் விளைவு மற்றும் அதனால் கிடைக்கும் அனுபவம் தான் நாம் அதில் பிரகாசிக்க முக்கிய காரணமாக அமையும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.

அதுவும் இது போன்ற ஒரு தெய்வீக சாஸ்திரத்தை கற்ற மாத்திரத்தில் புரிந்து கொண்டு பலனுரைப்பது சற்று கடினமான காரியமாகும் இதன் பொருட்டு ஜோதிடத்தை முழுமையாககற்றாலும் கடந்த மூன்று வருடத்திற்க்கும் மேலாக எனது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஜாதகங்களை அலசி ஆராய்ந்து வந்தனே தவிர அவர்களுக்கு ஒருபோதும் முழுமையாக பலன் சொன்னது கிடையாது.

இது எனக்கு நல்லதொரு அனுபவத்தை கொடுத்தாலும், இந்த ஆராய்ச்சியின் விளைவாக எனக்கு அகப்பட்ட இரண்டு முக்கியமான சவால்கள்......
ஒன்று மிககுறைவான இடைவெளியில் பிறக்கும் இரட்டையர்களின் ஜாதகங்களை வேறுபடுத்துவது மற்றொன்று லக்னசந்தி, ராசிசந்தி, நட்சத்திரசந்தி போன்ற சந்தியில் பிறக்கும் ஜாதகங்களை தீர்மானிப்பது. மேற்கூறிய இரண்டும் பாரம்பரிய ஜோதிடத்தில் ஒரு சவாலான காரியமாகும்.

எனினும் கடந்த வருடம் தெய்வ அனுகிரகத்தால், ஜோதிட மாமேதை மறைந்த திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களால் நிறுவப்பட்ட உயர் கணித சாரஜோதிட முறையை வளர்த்து வரும் ஜோதிட நல்லாசிரியரும் மற்றும் எனது மதிப்பிற்க்கும் மரியாதைக்கும் உரிய குருவான திரு. தேவராஜ் ஐயா அவர்களின் அறிமுகம் ஏற்பட்டு, பிறகு அவரிடம் ஒரு மாணவராக சேர்ந்து சார ஜோதிட முறையையும், அதன் யுக்திகளையும் கற்றுத் தெரிந்து கொண்டேன்.
உயர் கணித சார ஜோதிட முறையில் 30 வினாடி இடைவெளியில் பிறந்த இரு ஜாதகங்களை கூட மிக அழகாக வேறுபடுத்தி காட்ட முடியும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இப்பொழுது அசைக்க முடியாத ஒரு நம்பிக்கை, நல்லதொரு அனுபவம் மற்றும் எனது உயிருக்கும் மேலான எனது பெற்றோர்கள், மதிப்பிற்க்குரிய குருநாதர் மற்றும் எனது பாசமிகு நண்பர்களின் ஆசியில் இந்த இணையதளத்தை துவங்கி ஜோதிட சேவையை அளித்து வருகிறேன்.

No comments:

Post a Comment